படைப்பின் சிறப்பு பெண்மை!பன்முக திறனுண்டுபணி முடிக்கும் முனைப்புண்டுபாங்காய் படைத்திடும் உரமுண்டுநுண்ணிய அறிவுண்டுநூறு கோடி உணர்வுண்டுசமமான தளம் இருந்தால்சரித்திரம் காண திறனுமுண்டு!மகவென, மகளெனமங்கையென மாண்போடுதுணையென தாயெனபின் பேரிளம் பெண்ணெனநிலைகள் பல கடந்தும்குடும்பமெனும் கூடொன்றினைகுறையா அன்பு கொண்டுபிரியாமல் இணைக்கும் குணமும் இயல்பாய் அவளுக்கே உண்டு!புரியாத புதிரில்லை பெண்மை..பண்போடு அன்புடன் அணைத்துகண்ணியத்தோடு சுயம்மதித்துகனவுகளுக்கு வழி கொடுத்தால்,இல்லத்திலும் இவ்வுலகத்திலும்ஏற்றம் தரும் மாற்றம் புரிந்துஇகம் உயர்த்தும் பேரதிசயமவள்!பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!-சுஜனா
Read More »வண்ணக் கவிதைகள்
தந்தை
ஆல்போன்ற அன்பின் நிழலில்அருமையாய் அரவணைத்துஅறமும் மறமும் அறிவாய் தந்துதன் மெய் வருத்தி தளராமல் உழைத்துஆசைகள் துறந்து தேவைகள் மறைத்து தனக்கென வாழாமல் தன் மனை வளர்த்துபாசச் சிறகுகளில் பாந்தமாய் பேணிமௌன போர்வையில் மருகும் மனம் மறைத்துவார்த்தைகளில் வெளிப்படா பாரளவு பாசமதைவாழும் நாள் அனைத்திலும் வாழ்வியல் வழி வெளிப்படுத்தும்தன்னிகரற்ற தந்தையர் அனைவர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!Happy Father’s Dayதந்தை
Read More »அறவழி செழித்திடு
அகரம் துவங்கி அனைத்தும் கற்றிடு ஆழி சூழ் உலகை அன்பால் உயர்த்திடு இதயம் கனிந்து ஈகை முயன்றிடு உன்னால் முடியும் ஊக்கம் கொண்டிடு எண்ணம் யாவிலும் ஏற்றம் கண்டிடு ஐம்பொறி நெறிமுறை ஒழுங்குடன் ஓம்பிடு ஔவியம் தவிர்த்து அறவழி செழித்திடு -சுஜனா
Read More »வரம் தேடி..
போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் உன் மனதின் தொடர்பு எல்லையைத் தொடாமல் விழலுக்கிறைத்த நீராய் வீணாகிட அகத்தமிழ் கூறும் அழகிய வார்த்தைகள் கோர்த்து கரிய மையில் கூட காதல் நிரப்பி நான் வரைந்த நெஞ்சின் நேசக் கடிதம் உன் கரம் சேர்த்திட, நெடுநேரம் மரமற்ற தெருமுனையில் தவிப்புடன் நானிருக்க, சிறுதூரத்தில் தரையிறங்கிய நிலவாய் படியிறங்கியபடி நீ.. வெப்ப மண்டலத்தில் குளிர் காற்றாய் நீ நெருங்க பதட்டத்தின் காற்றழுத்தத் தாழ்வு …
Read More »வெற்றி நிச்சயம்!
வெற்றி நிச்சயம்! இலக்கு ஒன்றை மனதில் பொருத்தி கணக்கு இன்றி உழைப்பைப் புகுத்தி துவள வைக்கும் தோல்வி தகர்த்து மனம் முழுதும் நம்பிக்கை சுமந்து தொடர்ச்சி தவறா முயற்சி கொண்டால்.. -சுஜனா
Read More »தமிழ் அன்னை
தமிழ் அன்னை ஆண்டு பற்பல கடந்த உன் அகவை பல்லாயிரமெனினும் பேரிளம்பெண் அல்லவே நீ! எழிலும், வளமும், நலமும் என்றும் குன்றா சீரிளம் கன்னியன்றோ நீ! அறம் சார் நல்லவையும் மறம் சேர் வல்லவையும் அன்பும் பண்பும் சூழ்ந்திட அகமும், புறமும் உயர்ந்திட அறிவுறுத்தி வையத்துக்கே நெறிமுறை கற்பித்த நங்கை நல்லாள் நீ! தொன்று தொட்டு வாழும் செம்மொழி நீ! இலக்கணம் விதித்ததோ தொல்காப்பியம்.. நற்றமிழ் வார்த்தை கோர்த்து நம்மறிஞர் நல்கிய நன்னெறி நூல் சேர்த்து என்றும் தமிழர் எம் வாழ்வியலுக்கே இலக்கணம் வகுத்தவள் …
Read More »பெண்மை
பெண்கள் தினத்திற்காக இணையதளம் ஒன்றில் நடத்தப்பட்ட சிறப்பு கவிதைப் போட்டியில் ‘பெண்மை’ என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை, இதோ உங்கள் பார்வைக்கு.. பெண்மை ——— மெல்லிய உடலில் மலையென மன உரமுண்டு நுண்ணிய உணர்வுகள் நூறாயிரம் கொண்டு எண்ணியவை முடிக்கும் திறமும் தெரிந்து அன்புடை நெஞ்சம் ஆழமாய் அமைந்து வன்மிகு வலியுடன் உயிர் ஈனும் பேறு பெற்று உலகம் தழைக்க உயரிய நோக்குடன் உருவம் பெற்ற பெண்மையே! உடலாய் மட்டும் உனை பார்க்கா கயமை கலவா ஆண்மையையும் உலகை உயர்த்தும் …
Read More »இளையவர் நினைத்தால்..
நெஞ்சம் நிமிர்த்தி, வஞ்சம் வீழ்த்து அச்சம் தவிர்த்து, அறிவினைத் தீட்டு எதிர்ப்பைக் காட்டு, எதிரியைத் தாக்காதே உணர்ச்சி வசப்படாமல், உரிமையை மீட்டெடு. இளையவர் நினைத்தால்.. இயலாதது ஏதுமுண்டோ?! ஒன்றுபட்டு உலகை வென்றிடு! -சுஜனா
Read More »வீடு
அனைவருக்கான உலகில் எனக்கான தனி உலகம்.. “வீடு” -சுஜனா
Read More »ஆதரவுக் கரம்
இயலாத போதும்இயங்காத கால்களை இல்லம் சேர்த்திடஅயராது முயலும்அறியாப் பருவத்து அன்புச் செல்வமே!அறிவு முதிர்ந்த பலர்அறவே மறந்துபோனஅறத்தின் பெயர் தான்ஆதரவுக் கரமோ?!-சுஜனா
Read More »