Home / தமிழ் / வண்ணக் கவிதைகள் (page 2)

வண்ணக் கவிதைகள்

என் எண்ணங்களில் உதித்த  கவிதைகளுக்கு என் சொந்த வண்ணங்களை சேர்த்து பதித்திருக்கிறேன் இங்கே…கண்டு மகிழ வேண்டுகிறேன்!!!!!

உழைப்பு

கால்கள் தொய்ந்த சாலையில் இருள் வானம் கூரை வேய நடுவீதி நட்சத்திர விடுதியாய் மாற கட்டை வண்டியே கட்டில் மெத்தையோ?! கடும் உழைப்பின் உடல் களைப்பு குறைய காலை வருமுன் கண்ணுறங்கு தோழனே.. விடிந்த பின்னே வெடித்த உன் பாதங்கள் வீடுகள் எத்தனை விரைய வேண்டுமோ வாழ்வைத் தேடி! -சுஜனா

Read More »

தந்தை

  உயிர் தந்து உண்மையான அன்பு தந்து உயர்த்திடும் கல்வி தந்து ஒவ்வொரு வளர்ச்சியிலும் தூணாய் நின்று உவகையில் உளம் மகிழ்ந்து சோகங்களில் சுமை பகிர்ந்து நேர்மறை சிந்தனைகள் நிதம் தந்து உயரங்கள் எட்டும் போது ஒப்பில்லா இன்பம் கொண்டு சின்னச் சின்ன ஆசைகளையும் சிரமேற்று நிறைவேற்றி தன் மகவு ஒளிர்ந்திட தன்னை உருக்கி உழைக்கும் இறைவன் அருளிய அற்புத வரம் தந்தை!

Read More »

குழந்தைத் தொழிலாளி

சிதறிப் போன என் கல்விக் கனவுகளைச் சீரணித்து சில்லு சில்லாக கற்கள் உடைத்து சீக்கிரம் ஆறாத இரணங்கள் சுமந்து சிறுவாடு சேர்த்த சில்லறையில் சிறிதே உண்டு சீரழிந்த என் குடும்பத்தை சரி செய்திட செத்து செத்து உழைத்துப் பிழைக்கும் எதிர்காலம் இருண்டு போன  இளவயது தொழிலாளி நான்! நான் உடைத்த கற்கள் கூட  நாகரீகக் கட்டிடங்களாக உயர்ந்து நிற்க எட்டா கனவுகளுடன் கட்டாந்தரையில்  என்றும் என் வாழ்க்கைத் தரம்.. -சுஜனா- உங்கள் …

Read More »

பசி

ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் சுமந்து ஆவலுடன் அண்ணாந்து பார்த்து  ஆவி அலைந்து ஆலாய் பறப்பதும் ஒரு பிடி அன்னத்திற்கன்றோ! பலவகை விருந்து சமைத்து பாதியும் மீதம் வைத்து பதவிசாக குப்பையில் எறியும் பண்பட்டவர்களே, கொதிக்கும் என் கும்பியின் வேதனையும் அறிவீரோ?! கோடிகள் தேடியும் ஆவலடங்காமல் கொடுக்கும் வரிப் பணங்களை கொள்ளையடித்துக் கொண்டாடும் குள்ளநரிகளே, கொஞ்ச தேர பசி பொறுக்கவும் உங்களால் இயலுமோ? விளைநிலங்கள் வீடுகளாக உருமாற விவசாயிகளோ நடுவீதியில் குடிவர …

Read More »

என்னருகில் நீ இருந்தால்….

மனதை மயக்கும் மாலை செவியைத் தீண்டும் தேனிசை  மெல்ல வருடும் தென்றல் சாய்ந்துக் கொள்ள உன் தோள்கள்  சேர்ந்திருக்கும் நம் கைகள் வார்த்தைகளில்லா மௌனம் ஒளியில்லா விழிக் கவிதைகள் உருகிய உள்ளங்களின் கலவையில்  உயிர் கூட்டில் ஒரு சிலிர்ப்பு  காலம் கூட இயல்பு தொலைத்து  கணங்கள் நீண்டு யுகங்களாகி  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட நாம்  இன்று நிச்சயமான சொர்க்கத்தில்! -சுஜனா   உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்…

Read More »

துணை

இன்பத்தில் துவங்கி துன்பத்தில் நிறைவுற்றாலும் கலங்கிய கண்களுக்குள்ளும் கண்மணியாக நீயே இருப்பதால் தனிமையிலும் ஆறுதலாக என்றும் என்னுடன் உன் நினைவுகள்.. – சுஜனா

Read More »

காலணி

ill இல்லாதவன் கால்களுக்கு இற்றுப்போன பிளாஸ்டிக் குடுவையும் இலவம் பஞ்சாம்.. வலித்தன  கால்கள் வசதியைக் காட்ட வாங்கிய என் உயர்தரக் காலணிக்குள்! -சுஜனா

Read More »