Home / தமிழ் / தந்தை

தந்தை

ஆல்போன்ற அன்பின் நிழலில்

அருமையாய் அரவணைத்து

அறமும் மறமும் அறிவாய் தந்து

தன் மெய் வருத்தி தளராமல் உழைத்து

ஆசைகள் துறந்து தேவைகள் மறைத்து

தனக்கென வாழாமல் தன் மனை வளர்த்து

பாசச் சிறகுகளில் பாந்தமாய் பேணி

மௌன போர்வையில் மருகும் மனம் மறைத்து

வார்த்தைகளில் வெளிப்படா பாரளவு பாசமதை

வாழும் நாள் அனைத்திலும்

வாழ்வியல் வழி வெளிப்படுத்தும்

தன்னிகரற்ற தந்தையர் அனைவர்க்கும்

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

Happy Father’s Day😍😍😍

தந்தை