Home / தமிழ் / வண்ணக் கவிதைகள் / ஆதரவுக் கரம்

ஆதரவுக் கரம்

இயலாத போதும்

இயங்காத கால்களை

இல்லம் சேர்த்திட

அயராது முயலும்

அறியாப் பருவத்து

அன்புச் செல்வமே!

அறிவு முதிர்ந்த பலர்

அறவே மறந்துபோன

அறத்தின் பெயர் தான்

ஆதரவுக் கரமோ?!
-சுஜனா