Home / தமிழ் / வண்ணக் கவிதைகள் / குழந்தைத் தொழிலாளி

குழந்தைத் தொழிலாளி

சிதறிப் போன என் கல்விக் கனவுகளைச் சீரணித்து

சில்லு சில்லாக கற்கள் உடைத்து

சீக்கிரம் ஆறாத இரணங்கள் சுமந்து

சிறுவாடு சேர்த்த சில்லறையில் சிறிதே உண்டு

சீரழிந்த என் குடும்பத்தை சரி செய்திட

செத்து செத்து உழைத்துப் பிழைக்கும்

எதிர்காலம் இருண்டு போன 

இளவயது தொழிலாளி நான்!

நான் உடைத்த கற்கள் கூட 

நாகரீகக் கட்டிடங்களாக உயர்ந்து நிற்க

எட்டா கனவுகளுடன் கட்டாந்தரையில் 

என்றும் என் வாழ்க்கைத் தரம்..

-சுஜனா-

உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்…