ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் சுமந்து
ஆவலுடன் அண்ணாந்து பார்த்து
ஆவி அலைந்து ஆலாய் பறப்பதும்
ஒரு பிடி அன்னத்திற்கன்றோ!
பலவகை விருந்து சமைத்து
பாதியும் மீதம் வைத்து
பதவிசாக குப்பையில் எறியும் பண்பட்டவர்களே,
கொதிக்கும் என் கும்பியின் வேதனையும் அறிவீரோ?!
கோடிகள் தேடியும் ஆவலடங்காமல்
கொடுக்கும் வரிப் பணங்களை
கொள்ளையடித்துக் கொண்டாடும் குள்ளநரிகளே,
கொஞ்ச தேர பசி பொறுக்கவும் உங்களால் இயலுமோ?
விளைநிலங்கள் வீடுகளாக உருமாற
விவசாயிகளோ நடுவீதியில் குடிவர
வல்லரசாக வளர்த்திட விரும்பும் ஆட்சியாளர்களே,
வநிற்றுப் பசியில்லாத வளமான அரசை
வடிவமைப்பதும் வாய்ப்பற்றதோ?!
– சுஜனா-
உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்…