தந்தை

 

உயிர் தந்து

உண்மையான அன்பு தந்து

உயர்த்திடும் கல்வி தந்து

ஒவ்வொரு வளர்ச்சியிலும் தூணாய் நின்று

உவகையில் உளம் மகிழ்ந்து

சோகங்களில் சுமை பகிர்ந்து

நேர்மறை சிந்தனைகள் நிதம் தந்து

உயரங்கள் எட்டும் போது

ஒப்பில்லா இன்பம் கொண்டு

சின்னச் சின்ன ஆசைகளையும்

சிரமேற்று நிறைவேற்றி

தன் மகவு ஒளிர்ந்திட

தன்னை உருக்கி உழைக்கும்

இறைவன் அருளிய அற்புத வரம்

தந்தை!