உழைப்பு

கால்கள் தொய்ந்த சாலையில்

இருள் வானம் கூரை வேய

நடுவீதி நட்சத்திர விடுதியாய் மாற

கட்டை வண்டியே கட்டில் மெத்தையோ?!

கடும் உழைப்பின் உடல் களைப்பு குறைய

காலை வருமுன் கண்ணுறங்கு தோழனே..

விடிந்த பின்னே வெடித்த உன் பாதங்கள்

வீடுகள் எத்தனை விரைய வேண்டுமோ

வாழ்வைத் தேடி!

-சுஜனா