மனதை மயக்கும் மாலை
செவியைத் தீண்டும் தேனிசை
மெல்ல வருடும் தென்றல்
சாய்ந்துக் கொள்ள உன் தோள்கள்
சேர்ந்திருக்கும் நம் கைகள்
வார்த்தைகளில்லா மௌனம்
ஒளியில்லா விழிக் கவிதைகள்
உருகிய உள்ளங்களின் கலவையில்
உயிர் கூட்டில் ஒரு சிலிர்ப்பு
காலம் கூட இயல்பு தொலைத்து
கணங்கள் நீண்டு யுகங்களாகி
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட நாம்
இன்று நிச்சயமான சொர்க்கத்தில்!
-சுஜனா
உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்…