கவிதை பக்கம்
நட்புகளே!உலகெங்கும் பல பிரமாதமான தமிழ் கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் பரிமளம் பரப்பிகொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் எழுத்துக்கக்ளில் மதிமயங்கி, என்னுள் எழுந்த விபரீத ஆசையின் விளைபொருள்தான் கவிதை என்ற களத்தில்என்னை இறங்க தூண்டியது.. விளையாட்டாக வலைப்பக்கத்தில் (ப்ளாக்) விதைக்கதுவங்கியவை, மெல்ல மெல்ல எழுத்தார்வம் என்ற மரத்தை என்னுள் வளரச் செய்தது.ஆர்வம் என்னவோ அதிகமாக இருந்தாலும், கவிதை முயற்சி இன்னும் சிறுசெடியாகத்தான் உள்ளது.
கவிதை என்ற பெயரில் நான் பிதற்றியவற்றையும் பொறுமையுடன் வாசித்து எனக்கு மாறாத ஊக்கமும், அறிவுரைகளையும், ஆத்மார்த்தமாக வழங்கி இந்த திரியை துவங்க எனக்கு தைரியம்அளித்து மூல காரணமாயிருந்த என் அனைத்து அன்புத தோழர்,தோழிகளுக்கும்நெஞ்சார்ந்த நன்றிகள்!
வளர்ந்துவரும் சிறு பிள்ளையின்குறும்புகளை ரசிப்பது போல், நான் கவிதை என்ற பெயரில் செய்யும்குறும்புகளையும், பிழைகளையும் பொறுமையோடு வாசித்து, பெருந்தன்மையோடுமன்னித்து, பொன்னான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்ய அன்போடுவேண்டுகிறேன்!
நட்புகளே!
மேலான உங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும், திட்டுகளையும், பாராட்டுகளையும் (இருந்தால் :)) தயவு செய்து பதியுங்கள்…