படைப்பின் சிறப்பு பெண்மை!
பன்முக திறனுண்டு
பணி முடிக்கும் முனைப்புண்டு
பாங்காய் படைத்திடும் உரமுண்டு
நுண்ணிய அறிவுண்டு
நூறு கோடி உணர்வுண்டு
சமமான தளம் இருந்தால்
சரித்திரம் காண திறனுமுண்டு!
மகவென, மகளென
மங்கையென மாண்போடு
துணையென தாயென
பின் பேரிளம் பெண்ணென
நிலைகள் பல கடந்தும்
குடும்பமெனும் கூடொன்றினை
குறையா அன்பு கொண்டு
பிரியாமல் இணைக்கும் குணமும் இயல்பாய் அவளுக்கே உண்டு!
புரியாத புதிரில்லை பெண்மை..
பண்போடு அன்புடன் அணைத்து
கண்ணியத்தோடு சுயம்மதித்து
கனவுகளுக்கு வழி கொடுத்தால்,
இல்லத்திலும் இவ்வுலகத்திலும்
ஏற்றம் தரும் மாற்றம் புரிந்து
இகம் உயர்த்தும் பேரதிசயமவள்!
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
-சுஜனா