Home / தமிழ் / திருக்குறள் / திருக்குறள் – அதிகாரம் : பிறனில் விழையாமை

திருக்குறள் – அதிகாரம் : பிறனில் விழையாமை

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். 

குறள் இயல்: இல்லறவியல்.

அதிகாரம்: பிறனில் விழையாமை.

குறள் வரிசை: 141 -150

15. பிறனில் விழையாமை – Not coveting another’s wife

குரல் வரிசை: 141-150

பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை, ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல்.
அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற, தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகுவார்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம், தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்?
எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
பகை பாவம் அச்சம் பழியென நான்கும்,
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்.
பிறன் மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.
நலக்குரியார் யாரெனின், நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள் தோயாதார்.
அறன் வரையான் அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை.

பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை, ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல். 141

A person who values virtue and wealth in this
world will not covet another man’s wife.

அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142

Among those who deviate from virtue,
there is none as foolish
as the one who lurks at another’s door.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற, தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகுவார். 143

He who desires a trusting friend’s wife and does
harm, is no different from the dead.

எனைத்துணையர் ஆயினும் என்னாம், தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்? 144

However great a man may be, what will happen if he covets
another’s wife without reflecting even for a moment?

எளிதென இல் இறப்பான் எய்தும்  எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145

If one regards coveting another man’s wife
as being easy, blame will stay with one forever.

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்,
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146

One who covets another man’s wife, enmity, sin,
fear and blame will not leave him.

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன். 147

A family man who leads a virtuous life
will not covet another man’s wife.

பிறன் மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. 148

Not ogling another’s wife is not just a virtue.
It is also the discipline of the wise.

நலக்குரியார் யாரெனின், நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள் தோயாதார். 149

Virtuous men in this sea-girded earth are those
who do not embrace the shoulders of another’s spouse.

அறன் வரையான் அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 150

Even if one does not perform virtuous deeds,
it would be good if one does not desire another’s wife.

About Admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : நடுவு நிலைமை

குறள் பால்: அறத்துப்பால் குறள் இயல்: இல்லறவியல் அதிகாரம்: நடுவு நிலைமை. குறள் வரிசை: 111 – 120 நடுவு நிலைமை – Impartiality தகுதி …