இயற்றியவர் : திருவள்ளுவர்
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அடக்கமுடைமை
குறள் வரிசை: 121 -130
121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
Self-control places one among gods;
lack of it sinks one into pitch darkness.
122. காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
One must cherish the treasure of self-control,
for there is no greater wealth than that.
123. செறிவறிந்து சீர்மை பயக்கும், அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
Self-control, guided by wisdom, brings
great distinction.
124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்,
மலையினும் மாணப் பெரிது.
A man who practices self-control
is loftier than a mountain.
125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
Humility is a virtue to all.
It is an added wealth to the wealthy.
126. ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
Those who restrain their five senses in this birth,
like a tortoise withdrawing its limbs, will be
guarded in all their seven births.
127. யாகாவாராயினும் நா காக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு. 127
Even if you don’t control anything else, control
your tongue. A slip of the tongue will bring evil.
128. ஒன்றானும் தீச்சொல் பொருட் பயன் உண்டாயின்
நன்றாகாதாகி விடும்.
Even if there is a single harm rising from uttering harsh
words, it turns all good matters bad.
129. தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
A wound caused by fire will heal, but
a wound caused by the tongue will never heal.
130. கதம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
Virtue waits on the path for the humble and
learned man who has controlled his anger.