Home / தமிழ் / சிந்திப்போமா / சங்க இலக்கிய மலர்களின் தாவிரவியல் பெயர்கள்

சங்க இலக்கிய மலர்களின் தாவிரவியல் பெயர்கள்

குறிஞ்சிப்பாட்டில்  இடம்பெறும் 99 மலர்கள் – (Lines 61-96)

 

Scholars and translators sometimes differ in identifying the flora in Sangam poetry.  Here are three lists – those of Palaniappan Vairam Sarathy, P.L. Sami and R. Panchavarnam of Plant Information Centre.   

இப்பாடலில் இடம்பெறும் மலர்களை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களிடையே சில வேறுபாடுகள் உள்ளன. பழனியப்பன்  வைரம் சாரதி, பி.எல். சாமி மற்றும் ஆர்.சாமி ஆகியோர் தொகுத்த தாவரவியல் பெயர் பட்டியல் கீழ்க்கண்டவாறு:

Palaniappan Vairam Sarathy’s List

1. செங்காந்தள் – Gloriosa superba/Erythrinia indica / Bauhinia phoenicea Heyne

2. ஆம்பல் – Nymphaea lotus var. pubescens

3. அனிச்சம் – Unidentified
4. குவளை –  Nymphaea odorata

5. குறிஞ்சி – Strobilanthes kunthiana

6. வெட்சி – Ixora Coccinea
7. செங்கொடுவேரி – Plumbago rosea

8. தேமா – Mangifera indica

9. மணிச்சிகை – Ipomoea sepiaria J. Koenig ex Roxb
10. உந்தூழ் – Bambusa arundinaca

11. கூவிளம் – Aegle marmelos
12. எறுழம் – Calycopteris floribunda

13. சுள்ளி – Barleria prionitis

14. கூவிரம் – Crateva religiosa
15. வடவனம் – Ocimum sanctum L. var. hirsutum/Ocimum gratissum L.

16. வாகை – Albyzzia Lebbeck

17. குடசம் – Holarrhena antidysentrica
18. எருவை – Typha angustata

19. செருவிளை – Clitoria ternatea

20. கருவிளை – Clitoria ternatea
21. பயினி – Vateria indica

22. வானி – Euonymus dichotomous Heyne ex Roxb

23. குரவம் – Webera corymbosa
24. பசும்பிடி – Garcinia xanthochymus Hook

25.  வகுளம் – Mimusops elengi L.

26. காயா – Memecylon edule Roxb.

27. ஆவிரை – Cassia auriculata L.

28. வேரல் – Arundinaria wightiana Nees

29. சூரல் – Zizyphus oenoplia
30. குரீஇப் பூளை – Aerua lanata

31. குறுநறுங் கண்ணி – Abrus precatorius

32. குருகிலை – ficus virens

33. மருதம் – Terminalia elliptica

34. கோங்கம் – Cochlospermum gossypium
35. போங்கம் – Osmosia travancorica

36. திலகம் –  Adenanthera pavonina

37. பாதிரி – Stereospermum chelonoides
38. செருந்தி – Ochna squarrosa L.

39. அதிரல் – Derris Scandens

40. சண்பகம் – Michelia champaca

41. கரந்தை – Spaeranthus indicus

42. குளவி – Millingtonia hortensis

43. மா – Mangifera pinnata

44. தில்லை – Excoecaria agallocha

45. பாலை – Wrightia tinctoria/Mimusops kauki

46. முல்லை – Jasminum sambac/Alton Jasminum trichotumum Heyne ex Roth/ Jasminum auriculatum
47. குல்லை – Cannabis sativa

48. பிடவம் – Randia malabarica

49. சிறுமோரோடம்செங்கருங்காலி, Acacia sundra

50. வாழை – Musa paradisiaca

51. வள்ளி – Dioscorea species

52. நெய்தல் – Nymphaea Stellata
53. தாழை – Cocos nucifera

54. தளவம் – Jasminum elongatum/Jasminum polyanthum

55. தாமரை – Nelumbium nucifera
56. ஞாழல் – Caesalpinia cucullata

57. மௌவல் – Jasminum officinale

58. கொகுடி – Jasminun pubescens

59. சேடல் – Nyctanthes arbor-tristis

60. செம்மல் – Jasminum grandiflorum

61. சிறுசெங்குரலி – Trapa bispinosa Roxb
62. கோடல் – Gloriosa superba

63. கைதை – Pandanus odoratissimus

64. வழை – Ochrocarpus longifolius
65. காஞ்சி  – Trewia nudiflora

66. கருங்குவளை – Nymphaea rubra Roxb

67. பாங்கர் – Salvadora persica

68. மராஅம் – Shorea talura Roxb

69. தணக்கம் – Gyrocarpus americanus
70. ஈங்கை – Acacia caesia

71. இலவம் – Bombax malabaricum

72. கொன்றை – Cassia fistula
73. அடும்பு – ipomaea pes caprae

74. ஆத்தி – Bauhinia racemosa/Bauhinia tomentosa

75. அவரை – Dolichos lablab
76. பகன்றை – Operculina turpethum (L) Silva Manso

77. பலாசம் – Butea frondosa Roxb.

78. பிண்டி – Saraca indica L.
79. வஞ்சி – Calamus rotang

80. பித்திகம் – Jasminum augustifolium

81. சிந்துவாரம் – Vitex negundo
82. தும்பை –  Leucas aspera

83. துழாஅய் – Ocimum sanctum

84. தோன்றி – Gloriosa superba

85. நந்தி – Tabernaemontana coronaria

86. நறவம் – Luvunga scandens

87. புன்னாகம் – Callophylum elatum
88. பாரம் – Gossypium herbaceum

89. பீரம் – Luffa acutangula

90. குருக்கத்தி – Hiptage madablota
91. ஆரம் – Santalum album

92. காழ்வை – Aquilaria agallocha

93. புன்னை – Calophyllum inophyllum

94. நரந்தம் – Cymbopogon flexuosus

95. நாகம் – Mesua ferrea

96. நள்ளிருள்நாறி – Jasminum sambac
97. குருந்து –  Atlantia monophylla

98. வேங்கை – Pterocarpus marsupium Roxb.
99. புழகு – Calotropis gigantean

 

P.L. Sami’s List

 

  1. செங்காந்தள் – Gloriosa superba
  2. ஆம்பல் – Nymphaea lotus
  3. அனிச்சம் – Anaallis arvensis Linn
    4. குவளை – Nymphaea stellate
  4. குறிஞ்சி – Strobilanthes kunthiana
  5. வெட்சி – Ixora Coccinea
    7. செங்கொடுவேரி – Plumbago rosea
  6. தேமா – Mangifera indica, Mango
  7. மணிச்சிகை – Ipomoea sepiaria J. Koenig ex Roxb
    10. உந்தூழ் – Bambusa arundinaca
  8. கூவிளம் – Aegle marmelos
    12. எறுழம் – Calycopteris floribunda
  9. சுள்ளி – Barleria prionitis
  10. கூவிரம் – Crateva religiosa
    15. வடவனம் – Ocimum gratissimum
  11. வாகை – Albyzzia Lebbeck
  12. குடசம் – Holarrhena antidysentrica
    18. எருவை – Typha angustata
  13. செருவிளை – Clitoria ternatea – White
  14. கருவிளை – Clitoria ternatea – Blue
    21. பயினி – Vateria indica
  15. வானி – Euonymus dichotomous
  16. குரவம் – Webera corymbosa
    24. பசும்பிடி – Garcinia xanthochymus
  17. வகுளம் – Mimusops elengi
  18. காயா – Memecylon edule
  19. ஆவிரை – Cassia auriculata
  20. வேரல் – Arundinaria wightiana
  21. சூரல் – Zizyphus oenoplia
    30. குரீஇப் பூளை – Aerua lanata
  22. குறுநறுங் கண்ணி – Abrus precatorius
  23. குருகிலை – Butea frondosa
  24. மருதம் – Lagerstromia flos-reginae Retz
  25. கோங்கம் – Cochlospermum gossypium
    35. போங்கம் – Osmosia travancorica
  26. திலகம் – Adenanthera pavonina
  27. பாதிரி – Stereospermum chelonoides
    38. செருந்தி – Ochna squarrosa
  28. அதிரல் – Derris Scandens
  29. சண்பகம் – Michelia champaca
  30. கரந்தை – Spaeranthus indicus
  31. குளவி – Pogostemon vestitum Benth.
  32. மா – Mangifera India, Mango tree
  33. தில்லை – Excoecaria agallocha
  34. பாலை – Wrightia tinctoria
  35. முல்லை – Jasminum auriculatum
    47. குல்லை – Cannabis sativa
  36. பிடவம் – Randia malabarica
  37. சிறுமோரோடம் – செங்கருங்காலி, Acacia sundra
  38. வாழை – Musa superba
  39. வள்ளி – Dioscorea species
  40. நெய்தல் – Nymphaea Stellata
    53. தாழை – Cocos nucifera
  41. தளவம் – Jasminum rubescens
  42. தாமரை – Nelumbium speciosum
    56. ஞாழல் – Heritiera Littoralis
  43. மௌவல் – Jasminum officinale
  44. கொகுடி – Jasminun sambac
  45. சேடல் – Nyctanthes arbor-tristis
  46. செம்மல் –Jasminum grandiflorum
  47. சிறுசெங்குரலி – Trapa bispinosa Roxb
    62. கோடல் – Gloriosa superba
  48. கைதை – Pandanus odoratissimus
  49. வழை – Ochrocarpus longifolius
    65. காஞ்சி – Trewia nudiflora
  50. கருங்குவளை – Nymphaea Stellata
  51. பாங்கர் – Hardwickia pinnata Roxb., or a creeper
  52. மராஅம் – Shorea Talura
  53. தணக்கம் – Gyrocarpus americanus
    70. ஈங்கை – Acacia caesia
  54. இலவம் – Bombax malabaricum
  55. கொன்றை – Cassia fistula
    73. அடும்பு – ipomaea pes caprae
  56. ஆத்தி – Bauhinia tomentosa
  57. அவரை – Dolichos lablab
    76. பகன்றை – Operculina turpethum
  58. பலாசம் – Butea frondosa
  59. பிண்டி – Saraca indica
    79. வஞ்சி – Salis tetrasperma
  60. பித்திகம் – Jasminum augustifolium
  61. சிந்துவாரம் – Vitex negundo
    82. தும்பை – Leucas aspera
  62. துழாஅய் – Ocimum sanctum
  63. தோன்றி – Gloriosa superba
  64. நந்தி – Tabernaemontana coronaria
  65. நறவம் – Luvunga scandens
  66. புன்னாகம் – Callophylum elatum
    88. பாரம் – Gossypium herbaceum
  67. பீரம் – Luffa acutangula
  68. குருக்கத்தி – Hiptage madablota
    91. ஆரம் – Santalum album
  69. காழ்வை – Dysoxylum malabaricum
  70. புன்னை – Calophyllum inophyllum
  71. நரந்தம் – Cymbopogon flexuosus
  72. நாகம் – Mesua ferrea
  73. நள்ளிருள்நாறி – Jasminum sambac
    97. குருந்து – Atlantia monophylla
  74. வேங்கை – Pterocarpus marsupium
    99. புழகு – Calotropis gigantea

 

  1. Panchavarnam’s List, from the book ‘கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்
  2. செங்காந்தள் – Gloriosa superba
  3. ஆம்பல் – Nymphoides indica
  4. அனிச்சம் – Exocum pedunculatum
    4. குவளை – Monochoria vaginalis
  5. குறிஞ்சி – Strobilanthes kunthiana
  6. வெட்சி – Ixora Coccinea
    7. செங்கொடுவேரி – Plumbago indica
  7. தேமா – Mangifera indica
  8. மணிச்சிகை – Ipomoea nil
    10. உந்தூழ் – Ochlanda setigera
  9. கூவிளம் – Aegle marmelos
    12. எறுழம் – Woodfordia fruticosa
  10. சுள்ளி – Rhinacanthus nasutus
  11. கூவிரம் – Crataeva tapia
    15. வடவனம் – Ficus bengalensis
  12. வாகை – Albizia lebbeck
  13. குடசம் – Holarrhena Pubescens
    18. எருவை – Cyperus tuberosus
  14. செருவிளை – Canavalia rosea
  15. கருவிளை – Clitoria ternatea
    21. பயினி – Vateria indica
  16. வானி – Tracyspermum ammi
  17. குரவம் – Tarenna asiatica
    24. பசும்பிடி – Dalbergia lanceolaria
  18. வகுளம் – Mmanilkara hexandra
  19. காயா – Memecylon scutellatum
  20. ஆவிரை – Senna auriculatas
  21. வேரல் – Dendrocalamus strictus
  22. சூரல் – Calamus rotang
    30. குரீஇப் பூளை – Aerua lanata
  23. குறுநறுங் கண்ணி – Anisochilus carnonus
  24. குருகிலை – Mussaenda frondosa
  25. மருதம் – Terminalia arjuna
  26. கோங்கம் – Cochlospermum religiosum
    35. போங்கம் – Hopea ponga
  27. திலகம் – Mallotus philippensus
  28. பாதிரி – Stereospermum tetragonum
    38. செருந்தி – Discladium squarosum
  29. அதிரல் – Derris Scandens
  30. சண்பகம் – Magnolia champaca
  31. கரந்தை – Spaeranthus indicus
  32. குளவி – Jasminum coarctatum
  33. கலிமா – Buchanania axillaris
  34. தில்லை – Excoecaria agallocha
  35. பாலை – Sarcostemma secamone
  36. முல்லை – Jasminum sampac
    47. குல்லை – Orthosiphon thymiflorus
  37. பிடவம் – Benkara malabarica
  38. சிறுமோரோடம் – செங்கருங்காலி, Diapyros condolleana
  39. வாழை – Musa paradisiaca
  40. வள்ளி – Dioscorea oppositifolia
  41. நெய்தல் – Nymphaea nouchali
    53. தாழை – pandanus odorifer
  42. தளவம் – Jasminum grandiflorum
  43. தாமரை – Nelumbo nucifera
    56. ஞாழல் – Garcinia spicata
  44. மௌவல் – Jasminum auriculatum
  45. கொகுடி – Jasminun multiflorum
  46. சேடல் – Nyctanthes arbor-tristis
  47. செம்மல் –Jasminum polyanthum
  48. சிறுசெங்குரலி – Pentapetes phoenicea
    62. கோடல் – Ceropegia elegans
  49. கைதை – Pandanus kaida
  50. வழை – Mammea suriga
    65. காஞ்சி – Mallotus Nudiflorus
  51. கருங்குவளை –
  52. பாங்கர் – Careya arborea
  53. மராஅம் – Shorea roxburghii
  54. தணக்கம் – Gyrocarpus americanus
    70. ஈங்கை – Acacia intsis
  55. இலவம் – Bombax ceiba
  56. கொன்றை – Cassia fistula
    73. அடும்பு – ipomaea pes caprae
  57. ஆத்தி – Bauhinia racemosa
  58. அவரை – Dunbaria ferruginea
    76. பகன்றை – Crotalaria verrucosa
  59. பலாசம் – Butea monosperma
  60. பிண்டி – Humboldtia brunonis
    79. வஞ்சி – Salis purpurea
  61. பித்திகம் – Cananga odorata
  62. சிந்துவாரம் – Gendarussaitex vulgaris
    82. தும்பை – Leucas aspera
  63. துழாஅய் – Ocimum tenuiflorum
  64. தோன்றி – Firniana colorata
  65. நந்தி – Lagerstroemia indica
  66. நறவம் – Luvunga scandens
  67. புன்னாகம் – Macaranga indica
    88. பாரம் – Gossypium herbaceum
  68. பீரம் – Luffa acutangula
  69. குருக்கத்தி – Hiptage benghalensis
    91. ஆரம் – Santalum album
  70. காழ்வை – Xylia xylocarpa
  71. புன்னை – Calophyllum inophyllum
  72. நரந்தம் – Pleispermium alatum
  73. நாகம் – Mesua ferrea – Mesua Ferrea
  74. நள்ளிருள்நாறி – Gardenia resinifera
    97. குருந்து – Atlantia racemosa
  75. வேங்கை – Pterocarpus marsupium
    99. புழகு – Rhododendron nilagiricum

குறிஞ்சிப்பாட்டு

பாடியவர் கபிலர்
திணை குறிஞ்சி
துறை அறத்தொடு நிற்றல்
பாவகை ஆசிரியப்பா
மொத்த அடிகள் 261

புலவர் கபிலர், பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்கு, தமிழரின் களவு ஒழுக்கத்தைப் பற்றியும் கற்பு ஒழுக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு.  குறிஞ்சிப்பாட்டு என்ற பெயர் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல்.  குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை.  நச்சினார்க்கினியர் கூற்று, “இதற்குக் குறிஞ்சி என்று பெயர் கூறினார்.  இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழுவின் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின், அன்றியும் முதலானும் கருவாலும் குறிஞ்சிக்குரியாகவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்”.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள 99 மலர்கள் இடம்பெறும் வரிகள் கீழ்க்கண்டவாறு:

பாறையில் மலர் குவித்த பாவையர் (வரிகள் 61-96)

———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்   95
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ (61-98)

பொருளுரை:  அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோம்.  இந்த மலர்கள் – பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் பிறவும்,

சொற்பொருள்: 1. செங்காந்தள் – Red malabar Glory Lily, Gloriosa Superba, 2. ஆம்பல் – White Water lily, Nymphaea lotus, அல்லி 3. அனிச்சம் – possibly Anaallis arvensis Linn, 4. குவளை – Nymphaea stellate/Nymphaea odorata, Blue Nelumbo, 5. குறிஞ்சி – Square branched conehead, Strobilanthes kunthiana, 6. வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea, 7. செங்கொடுவேரி – Rosy-flowered leadwort, Plumbago rosea, 8. தேமா – மாமரம், Mango tree, Mangifera indica, 9. மணிச்சிகை – Ipomoea sepiaria, Koenig ex Roxb, 10. உந்தூழ் – பெருமூங்கில், Bambusa arundinaca, 11. கூவிளம் – வில்வம் மரம், Bael, Aegle marmelos, 12. எறுழம்பூ – Calycopteris floribunda, 13. சுள்ளி – Barleria prionitis,  14. கூவிரம் – Crateva religiosa, 15. வடவனம் – Ocimum sanctum/Ocimum gratissimum/Ocimum tenuiflorum, holy basil, 16. வாகை – மரம், Albyzzia Lebbeck, 17. குடசம் – Holarrhena antidysentrica,  18. எருவை – நாணல், Typha angustata, reed, 19. செறுவிளை – White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora, 20. கருவிளம், Mussell-shell creeper, Clitoria ternatea, 21. பயினி – Vateria indica, hill country tree, 22. வானி – Euonymus dichotomous, 23. குரவம் – Webera corymbosa, 24. பசும்பிடி – பச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus, 25. வகுளம் – மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusops elengi, 26. காயா – காசாமரம், Ironwood tree, Memecylon edule, 27. ஆவிரை – செடி, Tanner’s senna, Cassia auriculata, 28. வேரல் – சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Arundinaria wightiana Nees, 29. சூரல் – Calamus rotang – R. Panchavarnam, சூரை செடி –  Oblique-leaved jujube or small-fruited jujube, Zizyphus oenoplia, P.L. Sami and Palaniappan Vairam Parthasarathy, 30. குரீஇப்பூளை, சிறுப் பூளை – களை, A common weed, Aerua lanata, 31. குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து, Crab’s eye, Abrus precatorius, 32. குருகிலை – Butea frondosa/ficus virens, 33. மருதம் – மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia elliptica/Terminalia arjuna, 34. கோங்கம் – இலவு மரம், False tragacanth, Cochlospermum gossypium, 35. போங்கம் – மரம், Osmosia travancorica, 36. திலகம் – Adenanthera pavonina, 37. பாதிரி – மரம், yellow flower trumpet tree, Stereospermum chelonoides, 38. செருந்தி – மரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa, 39. அதிரல் – Derris Scandens மல்லிகைவகை, Wild jasmine, 40. சண்பகம் – மரம், champak, Michelia champaca, 41. கரந்தை – Spaeranthus indicus, 42. குளவி – பன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis, 43. மா – மாமரம், Mango tree, Mangifera indica, 44. தில்லை – மரம், Excoecaria agallocha, Blinding tree, 45. பாலை – Wrightia tinctoria/Mimusops kauki, 46. முல்லை – Jasminum sambac, 47. கஞ்சங்குல்லை – Cannabis sativa, 48. பிடவம் – Bedaly emetic-nut, Randia malabarica, 49. சிறுமோரோடம், செங்கருங்காலி, Acacia sundra/Acacia catechu, 50. வாழை – plantain, Musa paradisiaca, 51. வள்ளி – கிழங்கு கொடி, Dioscorea alata/Convolvulus batatas, 52. நெய்தல் – Nymphaea Stellata, Blue waterlily, 53. தாழை – Coconut tree, Cocos nucifera, 54. தளவம் – மஞ்சள் முல்லை, Jasminum elongatum/Jasminum polyanthum, 55. தாமரை – Lotus, Nelumbium speciosum, 56. ஞாழல் – University of Madras Lexicon – புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, Heritiera Littoralis/ Caesalpinia, 57. மௌவல் – Jasminum officinale,  58. கொகுடி – Jasminun pubescens, முல்லைக்கொடி வகை, 59. சேடல் – Nyctanthes arbor-tristis, Night-flowering jasmine, பவளமல்லிகை,  60. செம்மல் – சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை, 61. சிறுசெங்குரலி – Trapa bispinosa Roxb, 62. கோடல் – வெண் காந்தள், Gloriosa superba, 63. கைதை – தாழ், தாழம்பூ, Pandanus odoratissimus, 64. வழை – சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius, 65. காஞ்சி – பூவரச மரம், portia tree, Thespesia populnea, 66. கருங்குவளை – மணிக் குலை, குவளை வகை, Blue Nelumbo, Nymphaea Stellata/Nymphaea rubra, 67. பாங்கர் – Tooth-brush tree, Salvadora persica; ஓமை, Sandpaper-tree, Dillenia indica, உவாமரம், 68. மரவம் – வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa, 69. தணக்கம் – நுணா என்னுங் கொடி, Small ach root, Morinda umbellate – University of Madras Lexicon, 70. ஈங்கை – ஈங்கு செடி, Mimosa rubicaulis, 71. இலவம் – மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum, 72. கொன்றை – சரக்கொன்றை, Indian laburnum, Cassia fistula, 73, அடும்பு  – கொடி, Ipomaea pes caprae, 74. ஆத்தி – மரம், Common mountain ebony, Bauhinia racemosa/Bauhinia tomentosa, 75. அவரை – கொடி, Field-bean, Dolichos lablab, 76. பகன்றை – சிவதை கொடி, Indian jalap, Operculina turpethum, 77. பலாசம் – புரசமரம், Palas-tree, Butea frondosa, 78. பிண்டி – Asōka tree, Saraca indica, 79. வஞ்சி – Salis tetrosperma, இலுப்பை மரம், Bassia malabarica, 80. பித்திகம் – பித்திகை, Jasminum augustifolium, 81. சிந்துவாரம் – கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex negundo/Vitex trifolia, 82. தும்பை – செடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera, 83. துழாய், tulasī, Sacred basil, Ocimum sanctum, 84. தோன்றி – Gloriosa superba, Red Malabar glory lily, செங்காந்தள், 85. நந்தி – நந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria, 86. நறவம் – நறுமணக்கொடி, Luvunga scandens, 87. புன்னாகம் – சிறு மரம், Callophylum elatum, 88. பாரம் – பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum, 89. பீரம் – பீர்க்கு, Luffa acutangula, 90. குருக்கத்தி – மாதவிக்கொடி, Hiptage madablota, 91. ஆரம் – சந்தனம், Sandalwood tree, Santalum album, 92. காழ்வை – அகில், Eagle-wood, Aquilaria agallocha, 93. புன்னை – மரம், Mast-wood, Calophyllum inophyllum, 94. நரந்தம் – நாரத்தை, Bitter orange or Cymbopogon flexuosus – grass, 95. நாகப்பூ – Iron wood of Ceylon, Mesua ferrea, 96. நள்ளிருணாறி – இருவாட்சி, big jasmine variety, Jasminum sambac, 97. குருந்தம் – புனவெலுமிச்சை, wild lime, Atlantia monophylla, wild orange, citrus indica, 98. வேங்கை – East Indian kino tree, Pterocarpus marsupium, 99. புழகு – Calotropis gigantea, அரக்கு விரிந்தன்ன – அரக்கை விரித்தாற்போல், பரு ஏர் அம் புழகுடன் – பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், மால் அங்கு உடைய – நாங்கள் மயங்கினோம், மலிவனம் – அவா மிகுந்து, மறுகி – திரிந்து (பறித்து), வான்கண் கழீஇய – மழை பெய்து கழுவிய, அகல் அறை – அகன்ற பாறை, குவைஇ – குவித்து,

எளிய உரை: திருமதி.வைதேகி ஹெர்பர்ட்

Learn Sangam Poems by Phone

About admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் வரிசை: 131 -140 ஒழுக்கமுடைமை – Having …