Home / தமிழ் / சிந்திப்போமா / நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

ninaippathellaam

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

– கவிஞர் கண்ணதாசன் 

 

User Rating: Be the first one !

About admin

Check Also

தங்கப் பதக்க வெற்றியாளர் மாரியப்பன் தங்கவேலு – மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டி 2016

வெற்றிப்படிகள் ஏற கால்கள் கட்டாயமில்லை.. தேவை: விடாமுயற்சியுடன் நம்பிக்கை. தமிழ்நாடு ,சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் …