Home / தமிழ் / சிந்திப்போமா / தங்கப் பதக்க வெற்றியாளர் மாரியப்பன் தங்கவேலு – மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டி 2016

தங்கப் பதக்க வெற்றியாளர் மாரியப்பன் தங்கவேலு – மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டி 2016

mariappan-paralympics2016

வெற்றிப்படிகள் ஏற
கால்கள் கட்டாயமில்லை..
தேவை: விடாமுயற்சியுடன் நம்பிக்கை.

தமிழ்நாடு ,சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு,2016 பிரேசிலின் ரியோ டி செனீரோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்….. பள்ளிப்பருவத்தின்போது பேருந்து மோதியதில் வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தவர்… மனம்தளராது போராடி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால், அவரது மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் அறிந்து கொள்ள முடியும்… இத்தருணத்தில் அவருக்கு மட்டுமல்லாது அவரது வெற்றிக்குத் துணைநின்ற அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அவரது ஆசிரியப் பெருமக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள் !!!!!!