Home / தமிழ் / திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். 

குறள் இயல்: இல்லறவியல்.

அதிகாரம்: ஒழுக்கமுடைமை

குறள் வரிசை: 131 -140

  1. ஒழுக்கமுடைமை – Having Discipline

14. ஒழுக்கமுடைமை – Having Discipline

ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும். 131

Discipline brings honor.  It should be
cherished more than life.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. 132

Discipline should be honored and protected.
Even though many matters may be analyzed,
discipline alone will be the best guide for life.

ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133

Good conduct is the sign of noble birth;
bad conduct is the sign of low birth.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

If a Brahmin forgets past knowledge, he can relearn.
However, if he loses discipline, it leads to ruin.

அழுக்காறுடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கமிலான்கண் உயர்வு. 135

The life of the jealous will have no prosperity;
the life of the indecent will have no dignity.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 136

Those who are disciplined will not deviate from virtues.
They know the effects of evil conduct.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137

Good behavior brings greatness;
bad behavior brings great blame.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138

Good conduct is the seed of virtue;
bad conduct brings endless distress.

ஒழுக்கமுடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 139

It is hard for the virtuous to utter words
of evil nature, even by a slip of the tongue.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார். 140

Those who cannot live in harmony with the world,
even if they are learned, are fools indeed.

About Admin

Check Also

தந்தை

ஆல்போன்ற அன்பின் நிழலில் அருமையாய் அரவணைத்து அறமும் மறமும் அறிவாய் தந்து தன் மெய் வருத்தி தளராமல் உழைத்து ஆசைகள் …